வியாழன், 26 ஜூலை, 2012

பாஸ்போர்ட் -புதிய முறை-அருமை


பாஸ்போர்ட் -புதிய முறை-அருமை 

புது பாஸ்போர்ட் இல்ல பாஸ்போர்ட்ட புதுப்பிக்கனும் அப்படினால இதுக்கு முன்னுக்க வரைக்கும் குறைஞ்சது ஒரு நாள் முழுவதும் ஆகும்.அது இல்லாம நம்ம நேரங்காலத்த பொருத்து அதுக்கு பிறகு அலையவேண்டிய சூல்நிலை இருந்தது.அது இல்லாம புகைப்படம் கோணலா இருக்குனு சொல்லி அலைகழிப்பாங்க பாஸ்போர்ட் ஆபிஸ் முன்னுக்க இருக்குறவங்க தான் பார்ம் புல் பண்ணனும் நாம பண்ணின 1000 குறை சொல்லி திரும்ப அவங்ககிட்ட தான் அனுப்புவாங்க.அதுலயும் நாம ஆன்லைன்ல விண்ணப்பம் போட்டு தேதி வாங்கி போனம்னா நாம கொடுத்த விவரங்கள் கொஞ்சம் தப்பா இருந்தாலும் இன்னொரு நாள் போய் அலையனும்.இதுல புரோக்கர்கள் தொல்லை வேற இருக்கு. 

 ஆனால் இப்ப அப்படி எல்லாம் இல்லாம ரொம்ப எளிதாகவும் அதிகபட்சம் 2 மணிநேரத்துக்குள்ள நாம பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிச்சரலாம்.நாம சரியான டாக்குமென்ட்ஸ் மட்டும் கொண்டு போன போதும்.விண்ணப்பிக்கும் பொழுது நம்மை அரியாம தப்பு பண்ணி இருந்தாலும் அவங்களே அதை சரிபண்ணிகிறாங்க.முற்றிலும் குளிர்சாதன அறையில நல்ல மரியாதையோட நீங்க விண்ணப்பிச்சிட்டு வெளிய வரலாம்,
 இது பாஸ்போர்ட் சேவா கேந்ரா-(PASSPORT SEVA KENDRA) 
TCS நிறுவனம் இதை பாஸ்போர்ட் அலுவலகத்துடன் சேர்ந்து நடத்துகிறது.உண்மையிலேயே அருமையான கனிவான புன்னகை முகத்துடன் சேவை. 

https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/welcomeLink

இவ் இணையதளத்துக்கு சென்று வலது பக்கம் ONLINE APPLICATION FILLING இருக்கும் அங்கே சென்று NEW USER அ பாதிஞ்சிகாங்க.அது பதிஞ்ச பிறகு உங்க முதல் பக்கம் திறக்கும்.அதுல போய் நீங்க புது பாஸ்போர்ட் விண்ணப்பிக்றங்களா இல்ல ரெனிவலானு தேவையானதை செலக்ட் பண்ணிக்காங்க.அதுக்குப்பிறகு அவங்க உங்களை பத்தி கேட்டு இருக்குற விவரங்களை டாக்குமெண்ட்ஸ்ள இருக்ற மாதிரி குடுங்க ஒவ்வொரு ஸ்டெப் முடியும் பொழுதும் மறக்காமா SAVE பண்ணிக்காங்க.எல்லா விவரமும் கொடுத்த பிறகு கடைசியா எப்ப நாம அலுவலகத்துக்கு போகனும்னு நினைக்கிறங்களோ அந்த தேதியையும் நேரத்தையும் தேர்வு பண்ணிக்காங்க.அவ்வளவு தான் முடிஞ்சசு.அப்படியே பிரிண்ட் எடுத்துகாங்க.இன்னைலயிருந்து 90 நாள்குள்ள ஒரு தேதிய நாம புக் பண்ணிக்றலாம். 

இது மதுரை அலுவலகம்





 சொன்ன தேதியில நீங்க தேர்ந்து எடுத்த நேரத்துக்கு 30 நிமிசம் முன்னாடி பாஸ்போர்ட் சேவா கேந்ரா அலுவலகத்துக்கு போயிறுங்க.போகும் பொழுது உங்ககிட்ட இருக்குற டாக்குமென்ட்ஸ் ஒரிஜினல் கொண்டு போங்க. புகைப்படம் தேவை இல்லை.அவங்களே புகைப்படம் எடுத்துகிறுவாங்க.அத்தோட எல்லா விரல்ரேகையும் பதிஞ்சுகிறாங்க. நார்மல் விண்ணப்பம்னா 1000 ருபாயும் தக்கல்னா 2500 ருபாயும் கொண்டு போங்க.அதிகபட்சம் 2 மணி நேரத்துல உங்க வேலையை முடிச்சிட்டு வந்துரலாம் குளு குளுனு.அலுவலகத்துல எல்லோரும் புன்னகையோட உபசரிக்றாங்க.

 தேவையான டாக்குமெனட்: 
1.VOTER ID
2.RATION CARD
3.DATE OF BIRTH CERTIFICATE(1989 க்கு பிறகு பிறந்தவங்களுக்கு) 
4.SSLC OR HSC MARK SHEET 
5.DEGREE CERTIFICATE
6.VOTER ID இல்லாதவங்க 
 GOVERMENT BANK PASSBOOK MINIMUN 1 YEAR TRANSACTION 
 GAS BILL BOOK 
 LAND/HOUSE ORIGINAL DOCUMENT 
 ADARSH CARD

4 கருத்துகள்: